தொடர் கற்பழிப்பில் ஈடுபட்டவர் எரித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தொடர்ந்து ஊர்ப் பெண்களை, சிறுமிகளைகற்பழித்து வந்தவர் ஊர் மக்களால் மரத்தில் கட்டி வைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.

வந்தவாசி அருகே உள்ளது வழுவூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன் அசோகன். காம வெறிபிடித்தவன். இவனுக்கு பல ஊர்களைச் சேர்ந்த பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதனால் இவனதுமனைவி தேவகி, தனது மகள் லாவன்யாவுடன் கடந்த 2001ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி இறந்த பிறகு சுதந்திரப் பறவையாக மாறிய அசோகன், தனது பெண் தொடர்புகளைஅதிகப்படுத்தினான். அது தவிர தனக்கு சுகம் தர மறுக்கும் பெண்களை கற்பழிக்கவும் ஆரம்பித்தான்.

அதே ஊரைச் சேர்ந்த 40 வயதுப் பெண்மணியை அவன் வலுக்கட்டாயமாக கற்பழித்ததால், அந்தப்பெண் ஊரை விட்டே ஓடி விட்டார். அதேபோல, 2 வாரங்களுக்கு முன்பு மஞ்சுளா என்ற 14 வயதுசிறுமியைக் கற்பழித்தான். அந்தப் பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தே போனாள். இருந்தும்,ஊர்க்காரர்களில் பெரும்பாலானவர்கள் அசோகனின் சொந்தக்காரர்கள் என்பதால் அவனை விட்டுவிட்டனர்.

இந்த நிலையில், தயளன் என்பவரின் 8 வயது மகளை அசோகன், வயல் வெளிக்குக் கொண்டுபோய் வைத்து கற்பழித்துள்ளான். பின்னர் சிறுமியை ஊருக்குள் அனுப்பி விட்டு இவன் அருகில்உள்ள ஊருக்குப் போய் விட்டான்.

தயாளனின் மகளை அசோகன் கெடுத்து விட்ட செய்தி அறிந்ததும் ஊர் கொந்தளித்தது. இனியும்இவனை விடக் கூடாது என்று முடிவு செய்து ஊர் எல்லையில் அனைவரும் ஒன்று திரண்டுஅசோகனுக்காக காத்திருந்தனர்.

இரவில் வழுவூருக்கு வந்தான். அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டம் அசோகனை சரமாரியாகஅடித்து நொறுக்கியது. பின்னர் அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து, தீ வைத்தனர். அலறலுடன்அசோகன் எரிந்து சாம்பலானான்.

இதுகுறித்து அறிந்த செய்யாறு சரக டிஎஸ்பி பன்னீர் செல்வம் உள்ளிட்ட காவல்துறை அதிாகரிகள்விரைந்து வந்தனர். உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அசோகனை எரித்துக்கொன்றதாக 5 பேரைக் கைது செய்தனர். ஆனால் அனைவரும் சேர்ந்துதான் கொன்றோம், ஐந்துபேரை மட்டும் கைது செய்யக் கூடாது என்று ஊர் மக்கள் போலீஸாரை முற்றுகையிட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+