விஷ உணவு: 2 குழந்தைகள் சாவு, பெற்றோர் உயிர் ஊசல்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி நகருக்கு அருகே உள்ள கிராமத்தில், வீட்டில் உணவு சாப்பிட்ட 2குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. அவர்களுடன் சேர்ந்து விஷ உணவை சாப்பிட்ட தாயும்,தந்தையும் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர்.

பவானி அருகே உள்ளது சின்ன வடமலைபாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் மாதப்பன்.இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அன்னக்கொடி (2 வயது), வெங்கட் (4 வயது) ஆகியகுழந்தைகள் உள்ளன.

இன்று காலை இவர்களுக்கு ராணி உணவு பரிமாறியுள்ளார். பின்னர் அவரும், மாதப்பனும்சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்த பிறகு நான்கு பேருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. மயங்கிவிழுந்து விட்டனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், 4 பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு 2குழந்தைகளும் பரிதாபமாக இறந்தன. ராணியும், மாதப்பனும் உயிருக்குப் போராடிக்கொண்டுள்ளனர்.

இவர்கள் தற்கொலை செய்து கொள்ள முயன்றனரா அல்லது உணவில் விஷத்தன்மைஏற்பட்டிருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+