பிரதமரைத் தவிர்க்கவே ஜெ. ஊட்டி பயணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் வாஜ்பாய் வருகிற 13ம் தேதியன்று சென்னைக்கு வரும்போது அவரை சந்திக்காமல்தவிர்க்கும் பொருட்டே முதல்வர் ஜெயலலிதா முன்கூட்டியே இன்று ஊட்டிக்குப் பயணமாவதாககூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா ஊட்டியில் ஒரு வாரம் ஓய்வு எடுப்பதற்காக இன்று கோவை கிளம்பிச்செல்கிறார். அவருடன் தோழி சசிகலாவும் செல்கிறார். முதல்வரின் திடீர் ஊட்டி பயணம் பல்வேறுகேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரதமர் வாஜ்பாய் சென்னை வரும்போது அவரை சந்திக்காமல் தவிர்க்கும் பொருட்டே முதல்வர்ஊட்டிக்குப் போவதாக கூறப்படுகிறது. பாரதீய ஜனதாவுடன் நெருங்கிய நட்பை வளர்த்து வரும்முதல்வர் ஜெயலலிதாவுக்கு துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்டோரின் ஆசி நிறையவே உள்ளது.ஆனால் பிரதமர் வாஜ்பாய்தான் அவருக்கு ஆதரவாக இல்லை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று ஜெயலலிதா ஆதரவுபா.ஜ.க. தலைவர்கள் பிரதமரிடம் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் ஜெயலலிதாவுடன் சேர்ந்தால்மரியாதை இருக்காது, என்றும் இதற்காக பல உதாரணங்களை எடுத்துக் காட்டியும், மத்தியஅமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட சில பா.ஜ.க. தலைவர்கள் பிரதமரிடம் விளக்கியுள்ளனர்.

மேலும், பிரதமரைப் பொருத்தமட்டில் திமுக தலைவர் கருணாநிதியுடன் அவருக்கு நல்ல நட்புஉள்ளது. அந்த நட்பை முறித்துக் கொள்ள வாஜ்பாய் தயாராக இல்லை. மேலும் நம்பகமானகூட்டணிக் கட்சியாக திமுகவை அவர் கருதுகிறார்.

மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்பான பொடா விவகாரம், கருணாநிதி கைதுசெய்யப்பட்ட பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றின்போது மத்திய அரசு எதுவும்செய்யாமல் உள்ள நிலையிலும் கூட, பிரதமர் மீது கருணாநிதி தொடர்ந்து நம்பிக்கை வைத்து,கூட்டணி ஆட்சிக்கு இடையூறு செய்யாமல் இருப்பதும் வாஜ்பாய்க்கு திமுக மீது கூடுதல் பற்றுஏற்பட்டுளளது.

முன்பு ஒருமுறை ஜெயலலிதா திடீர் என்று ஆதரவை வாபஸ் வாங்கியதால், ஒரு ஓட்டுவித்தியாசத்தில் பா.ஜ.க. ஆட்சியை இழந்ததை வாஜ்பாய் இன்னும் மறக்கவில்லை என்றும்கூறப்படுகிறது.

இதையெல்லாம் எண்ணிப் பார்த்த வாஜ்பாய் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்று திட்டவட்டமாக கூற விட்டதாகத் தெரிகிறது. இதனால் ஜெ. ஆதரவு பா.ஜ.க தலைவர்களும்,ஜெயலலிதாவும் அப்செட் ஆகியுள்ளனர்.

இதை மனதில் வைத்தே, பிரதமர் வரும்போது இங்கிருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், ஊட்டிக்குக்கிளம்ப ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வருகிற 13ம் தேதி சென்னையில் இந்து ஆங்கில நாளிதழின் 125-வது ஆண்டு விழாகொண்டாடப்படவுள்ளது. அதில் கலந்து கொள்ளவே வாஜ்பாய் இங்கு வருகிறார். இந்த விழாவில்கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கும், இந்து பத்திரிக்கை ஆசிரியர் ராம் நேரில் சென்று அழைப்புவிடுத்தார். ஆனால் பிரதமர் வருவதால் தன்னால் கலந்து கொளள முடியாது என்று ராமிடமேஜெயலலிதா கூறி விட்டதாகவும் தெரிகிறது.

பிரதமரை வரவேற்க வேண்டிய முதல்வர் ஜெயலலிதா, அதைத் தவிர்ப்பதற்காக ஊட்டி செல்வதாகவெளியாகியுள்ள செய்தியால், தமிழக பா.ஜ.க. த லைவர்களும் கூட அப்செட் ஆகியுள்ளதாகத்தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+