சர்ச்சையின்றி முடிந்த விநாயகர் சிலை கரைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் நேற்று விநாயகர் சிலைகள் எந்தவித பிரச்சினையுமின்றி, கடலில்கரைக்கப்பட்டன.

சென்னை நகரில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாகஎடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகளும், மற்ற அமைப்புகளின் சார்பில்வைக்கப்பட்டிருந்த சிலைகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன.

அனைத்து சிலைகளும் மெரீனா கடற்கரையை வந்தடைந்ததும், கடலில் கரைக்கப்பட்டன. பெரியசிலைகள், கிரேன்கள் மூலம் தூக்கப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் முன் இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன்செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆண்டு முதல் கடல் நீர் மாசு அடையாத வகையில்சிலைகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இருப்பினும், விநாயகர் சிலைகளை கடலில்கரைப்பதால் மட்டும் கடல் நீர் மாசு அடைவதில்லை.

கூவம் நதியும், ஏராளமான சாக்கடைகளும் கூட கடலில் கலக்கின்றன. இதனாலும் கடல் நீர் வளம்மாசு அடைகிறது. இது அதிகாரிகளுக்குத் தெரியாதா.? அதை சரி செய்ய அரசும் உரியநடவடிககை எடுக்க வேண்டும் என்றார்.

எந்தவித பிரச்சினையுமின்றி விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்ததால் காவல்துறைஅதிகாரிகளும், பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். விநாயகர் சிலைஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+