ராமேஸ்வரம் மீனவர்கள் நிலை: வாஜ்பாய்க்கு ஜெ. கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தமிழக மீனவர்கள் பிடித்துச் செல்லப்படுவதைத் தடுக்கஉரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரமர் வாஜ்பாய்க்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சர்வதேச விதிமுறைகளை மீறி அடிக்கடி இலங்கைஅரசு தமிழக மீனவர்களைப் பிடித்துச் சென்று விடுகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது மொத்தம் 34 மீனவர்கள் இலங்கை அரசின் பிடியில் உள்ளனர். இவர்களில் ராமநாதபுரம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 15 பேர், நாகையைச் சேர்ந்தவர்கள் 14 பேர், புதுக்கோட்டையைச்சேர்ந்தவர்கள் 5 பேர்.

இவர்களின் பரிதாப நிலை குறித்து தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இவர்கள்இலங்கை சிறைகளில், சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக 17 முதல் 177 நாட்களாக வாடிவருகின்றனர்.

எப்போது இவர்கள் இந்தியா திரும்புவார்கள் என்ற தகவல் கூட கிடைக்காததால், இவர்களதுகுடும்பத்தினர் அச்சத்திலும், பெரும் துயரத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் பரம்பரை பரம்பரையாக கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில்தான் மீன்பிடித்து வருகிறார்கள். இது தங்களுக்குத் தெரியும். ஆனால் அவ்வாறு மீன் பிடிக்கச் சென்றால்,இலங்கை கடற்படையினரும், மீனவர்களும் தமிழக மீனவர்களைத் தடுக்கின்றனர், தாக்குகின்றனர்,கைது செய்து சென்று விடுகின்றனர்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அடிக்கடி நடக்கிற விஷயமாக மாறிவிட்டது. எனவே தூதகர அளவில் இலங்கை அரசிடம் இப்பிரச்சினையைக் கொன்டு சென்று 34மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்வது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+