மம்தா, செஞ்சி ராமச்சந்திரன் மீண்டும் அமைச்சராகினர்

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி:

மம்தா பானர்ஜி மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சர்காக இன்றுபதவியேற்றுக் கொண்டனர்.

இருவரும் பல்வேறு காரணங்களுக்காக முன்பு பதவி விலகியவர்கள். இவர்களில் மம்தா முன்பேஅமைச்சரவையில் சேர தயாராக இருந்தும், அவர் கேட்ட துறையை ஒதுக்க பிரதமர் வாஜ்பாய்மறுத்து விட்டதால் அமைச்சரவையில் சேராமல் இருந்து வந்தார்.

உதவியாளர் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக பதவி விலகிய செஞ்சி ராமச்சந்திரன், அந்தவழக்கில் சம்பந்தப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்ததால் தற்போது மீண்டும் அமைச்சர் பதவிகொடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதில், மம்தா பானர்ஜியும், செஞ்சிராமச்சந்திரனும் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இருவருக்கும் குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் வாஜ்பாய், துணைப்பிரதமர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மம்தா பானர்ஜி கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு நிலக்கரித் துறைஒதுக்கப்பட்டுள்ளது. செஞ்சி ராமச்சந்திரனுக்கு, ஜவுளித்துறை இணை அமைச்சர் பொறுப்புகொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இதுவரை ரயில்வே இணை அமைச்சராக இருந்து வந்த பண்டாரு தத்தாத்ரேயா, நகர்ப்புறவளர்ச்சித் துறை அமைச்சராகவும், விளையாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்து வரும்பொன். ராதாகிருஷ்ணன் இனிமேல் தரை வழிப் போக்குவரத்துத் துறையையும் கவனிப்பார்கள்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+