3 நீதிபதிகளின் விசாரணை தொடர்கிறது
சென்னை:
ஜூலை 2ம் தேதி காலையிலேயே வீட்டிற்கு வந்து கைது செய்து விட்டதால், வேலைக்கு வரஇயலவில்லை என்று 3 நீதிபதிகள் குழுவின் விசாரணையின்போது, ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் 3 நீதிபதிகள்கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும்விசாரணை தொடங்கியது.
இன்றைய விசாரணையின்போது, தலைமைச் செயலக ஊழியர்கள் 164 பேர் கலந்து கொண்டனர்.விசாரணைக்கு பின்னர் வெளியில் வந்த ஒரு ஊழியரிடம் கேட்டபோது, ஜூலை 2ம் தேதி ஏன்வேலைக்கு வரவிலலை என்று நீதிபதி கேட்டார். அப்போது, அன்று காலையிலேயே போலீஸார்வந்த கைது செய்து சென்று விட்டனர். இதனால் வேலைக்கு வர முடியவில்லை என்று கூறினேன்.
நான் கூறியதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணை முடிவு துறை அதிகாரிகளால்தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார் என்றார்.


Click it and Unblock the Notifications
