தடையை மீறி ஆடு வெட்டிய 15 பேர் கைது
திருச்சி:
திருச்சியில் தடையை மீறி ஆடு வெட்டிய மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த 15 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
கோவில்களில் ஆடு, கோழி வெட்டுவது பாரம்பரியமாக நடந்து வரும், தமிழ் கலாசாரத்தின்சின்னம் என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் கூறியுள்ளது. இதை வலியுறுத்தும் வகையில்,திருச்சியில், ஆடு வெட்டும் பேராராட்டம் நடத்தப் போவதாக அது அறிவித்திருந்தது.
அவர்கள் அறிவித்திருந்த உறையூர் குழுமாயி அம்மன் கோவில் பகுதியில் போலீஸார்குவிக்கப்பட்டனர். ஆனால் போலீஸாரை ஏமாற்றும் விதமாக, காலை 11 மணியளவில்,மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள சப்பானி கோவிலுக்கு அருகே ஆட்டுடன் மக்கள் கலைஇலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குழுமினர்.
அங்கு திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் ஆடு ஒன்றை அவர்கள் வெட்டினர். இந்தத் தகவல்அறிந்த போலீஸார் அங்கு விரைந்தனர். வெட்டப்பட்ட ஆட்டைக் கைப்பற்றிய அவர்கள், 15பேரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications