வன்னியர்கள் ஆள வேண்டும், இல்லையேல் அழிவுதான்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

செஞ்சி:

வன்னியர்கள் ஒரு முறையாவது ஆள வேண்டும். அதற்கு என் பின்னால் திரண்டு வர வேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் அழிந்து விடுவார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகிகல் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகரின் திருண விழாவில் கலந்துகொண்ட ராமதாஸ் அங்கு பேசுகையில், வன்னியர்கள், பாட்டாளி மக்கள் கட்சி உருவாவதற்கு முன்புஎந்த நிலையில் இருந்தார்கள் என்பதை ஒவ்வொரு வன்னியரும் உணர்ந்து பார்க்க வேண்டும்.

வன்னியர்களுக்கு இதுவரை இருந்த தமிழக அரசுகள் ஒன்றுமே செய்யவில்லை. எதையாவதுசெய்தார்களா என்று எண்ணிப் பார்த்தால் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அவர்களது உழைப்பு,ஓட்டுக்கள், பணத்தை மட்டும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வாஙகிக் கொண்டுபயனடைந்துள்ளது.

வன்னியர்களை ஒழிப்பதுதான் முதல் வேலையாக ஜெயலலிதா சொல்லிக் கொண்டு திரிகிறார்.ஆனால் வன்னியர்கள் உயர வேண்டும், வாழ வேண்டும், அப்படி வாழ வேண்டும் என்றால் ஒருமுறையாவது இந்த மாநிலத்தை அவர்கள் ஆள வேண்டும். அதற்கு என் பின்னால் அணி திரண்டுவந்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் அவர்களை அனைவரும் சேர்ந்து அழித்து விடுவார்கள்.

ராஜாஜியின் சூழ்ச்சிக்கு 1952ல் மாணிக்கவேல் படையாச்சி பலியானார். அதற்குப் பிறகுவன்னியர்களால் எழுந்திருக்கவே முடியவில்லை. நான் கட்சி ஆரம்பித்து வந்த பின்புதான்வன்னியர்கள் யார் என்பதை மற்ற ஜாதிக்காரர்களும், அரசியல் கட்சியினரும் புரிந்துகொணடார்கள்.

நமது ஜாதி மிகப் பெரியது. 2 கோடி பேர் இருக்கிறார்கள். ஆனால் பூதக்கண்ணாடி வைத்தப்பார்க்கிற அளவுக்கு உள்ள ஜாதிகளுக்கு எல்லாம் மற்ற அரசியல் கட்சிகள் முக்கியத்துவம்கொடுக்கின்றன. வன்னியர்களை மட்டும் புறக்கணிக்க நினைக்கின்றன.

பாமக ஆட்சிக்கு வந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். பாமக வந்து விட்டால் வன்னியர்களுக்குவாழ்வு கிடைத்து விடுமே என்று அஞ்சுகிறார்கள். ஆனால் பாமக வர வேண்டும். அப்போதுதான்வன்னியர்களால் தலை நிமிர முடியும். நாம் மட்டும் பதவிகளை அனுபவிக்க வேண்டாமா?சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்குப் போக வேண்டாமா?

எனவே ஒவ்வொரு வன்னியரையும் கேட்டுக் கொள்கிறேன். நாம் வாழ பாமக இந்த மாநிலத்தைஆள வேண்டும். அதற்காக எனது பின்னால் அனைவரும் அணி திரண்டு வர வேண்டும்.இல்லாவிட்டால் அழிந்து விடுவீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+