காவிரி நீர் திறந்து விட வாசன் கோரிக்கை
கும்பகோணம்:
காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளைக் காப்பாற்ற உடனடியாக காவிரி நீரைகர்நாடகத்திடமிருந்து பெற பிரதமர் வாஜ்பாயும், முதல்வர் ஜெயலலிதாவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்
கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் ஜி.கே.மூப்பனாரின் வெண்கலச் சிலைநிறுவப்பட்டுள்ளது. இதை வாசன் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், காவிரி டெல்டாப்பகுதி விவசாயிகள் காவிரி நீருக்காக காத்துள்ளனர். இப்போது காவிரி திறந்து விடப்பட்டால்தான்கடை மடைப் பகுதி விவசாயிகள் பலனடைய முடியும்.
உரிய நேரத்தில் காவிரி நீரைத் திறந்து விடுவதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகளைக் காக்கமுடியும். கடந்த இரண்டு வருடங்களாகவே காவிரி நீர் தமிழகத்திற்கு சரியாக கிடைக்கவில்லை.இதற்கு மத்திய மற்றும் தமிழக அரசுகளே காரணம்.
ஜெயலலிதாவும், அதிமுகவும் மக்கள் ஆதரவை இழந்து வருகிறார்கள். எனவே இனிமேல்ஜெயலலிதாவால் தமிழக மக்களின் வாக்குகளைப் பெற முடியாது, ஆட்சிக்கும் வர முடியாது என்றார்அவர்.












Click it and Unblock the Notifications