2 வீரப்பன் கூட்டாளிகள் கைது
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 2 பேரை அதிரடிப்படை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதியில் வைத்து இவர்கள் பிடிபட்டனர். அஞ்செட்டி வனப்பகுதியில் வீரப்பன் கூட்டாளிகள் ஒளிந்திருப்பதாக அதிரடிப்படைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கந்தசாமி என்பவரது தலைமையிலான அதிரடிப்படை அங்குவிரைந்தது. அப்போது கட்டினபள்ளம் என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த மாதன் என்கிறமாதையன் மற்றும் முனியன் ஆகிய இருவரை போலீஸார் பிடித்தனர்.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications