கெளரவ ரேஷன் கார்டு: அரசு புதிய எச்சரிக்கை
சென்னை:
கெளரவ ரேஷன் கார்டுகளாக தற்போதைய ரேஷன் கார்டுகளை வருகிற 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளாவிட்டால், தற்போதைய ரேஷன் கார்டுகள் எதற்குமே செல்லாது என்று தமிழக அரசுஎச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மாத வருவாய் ரூ. 5000 மேல் இருப்பவர்கள், வருமான வரி கட்டுபவர்கள்ஆகியோரது ரேஷன் கார்டுகளை, கெளரவ ரேஷன் கார்டுகளாக மாற்றி தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
வருகிற 30ம் தேதிக்குள் தற்போதைய ரேஷன் கார்டுகளைக் காட்டி அதை கெளரவ ரேஷன்கார்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்குள்செய்யாதவர்களின் கார்டுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், 30ம் தேதிக்குள் கெளரவ ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளாவிட்டால், அந்தகார்டுகள், கெளரவ ரேஷன் கார்டுதாரர்களின் பட்டியலில் சேர்க்கப்படும் என்று அரசு தற்போதுஅறிவித்துள்ளது.
இதன் மூலம் கெளவர ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளாவிட்டால், 30ம் தேதிக்கு மேல் அந்தகார்டுகள் செல்லாத கார்டுகளாக மாறி விடும், வேறு எதற்குமே பயன்படுத்த முடியாது என்பதை அரசுமறைமுகமாக சுட்டிக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications