வைகோவிடம் வாழ்த்து பெற்றார் செஞ்சி ராமச்சந்திரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மீண்டும் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செஞ்சி ராமச்சந்திரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பொடா வழக்கில் கைதாகியுள்ள வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் இன்று காலை பூந்தமல்லி பொடாநீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். அப்போது செஞ்சி ராமச்சந்திரன் அங்கு வந்தார்.
வைகோவை சந்தித்த அவர் அவரது வாழ்த்துக்களைப் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம்பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். என்னைக் குற்றமற்றவன் என்று ஏற்றுக்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மதிமுக தூய்மையானது, ஊழல் கரைபடியாதது என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications