ஜெ. ஆட்சி ரொம்ப மோசம்: இளங்கோவன்
தர்மபுரி:
ஜெயலலிதா ஆட்சி மிகவும் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ்கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் மாரத்தஹள்ளியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் நடிகர் திலகம்சிவாஜி கணேசன் ஆகியோரின் சிலைகள் திறக்கப்பட்டது. இளங்கோவன் திறந்து வைத்துப்பேசுகையில், ஜெயலலிதா ஆட்சி மிகவும் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது.
2 முறை அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு, 2 முறை பதவிநீக்கம் செய்யப்பட்ட அன்வர் ராஜா,எங்களது தலைவி சோனியா காந்திக்கு அறிவுரை கூறுகிறார். ஜெயலலிதாவைப் பார்த்து சோனியாகாந்தி பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமாம். இவர் யார், சோனியாவுக்கு அறிவுரை கூற. யார்,யாரிடம் பாடம் கற்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.
ரேஷன் அரிசி விலையை ஏற்றி விட்டார்கள். தற்போது ரூ. 5000க்கு மேல் சம்பளம்வாங்குபவர்களுக்கு ரேஷன் கடையில் எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள். ஆடு கோழிபலியிடுவதைத் தடுக்கிறார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்தால், விரைவில் இந்த ஆட்சியைவீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விடும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications