இஸ்ரேல் எதிர்ப்பாளர்களுக்கு சுவாமி விடுக்கும் சவால்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

இஸ்ரேலை எதிர்க்கும் கட்சித் தலைவர்கள், அந்த நாடு நமக்கு தரும் ஆயுதங்களையும், தீவிரவாதஎதிர்ப்பு உதவிகளையும் வேண்டாம் என்று கூறத் தயாராக இருக்கிறார்களா என்று தமிழக ஜனதாக்கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 1962ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நமக்குபாதுகாப்பு தொடர்பான பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. தீவிரவாதத்திற்கு எதிரானபோரிலும் அது நமக்கு பல்வேறு வகையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் கொடுத்துவருகிறது.

எகிப்து போன்ற அரபு நாடுகளே இஸ்ரேலுடன் உறவு வைத்துள்ளபோது, இந்தியா வைத்துக்கொள்வதில் என்ன தவறு உளளது? இஸ்ரேல் பிரதமர் ஷரோனை இந்தியாவுக்கு அழைத்துள்ளதில்தவறு ஏதும் இல்லை. இந்தியப் பிரதமரைப் போலவே, ஷரோனும் ஜனநாயக முறையில், ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான்.

இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் உள்ள உறவுக்கு மத்தியில பாலஸ்தீனப் பிரச்சினை வரவில்லை.நாம் பாலஸ்தீனர்களைக் கைவிடவில்லை, அதேசமயம், இஸ்ரேலை விலக்கவும் தேவையில்லை.

ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்ப நாம் மறுக்கக் கூடாது. அமெரிக்காவின் தலைமையிலானசர்வதேச தீவிரவாத எதிர்ப்புப் படையில் இந்தியாவும் இடம்பெறுவதில் தவறில்லை.

ஈராக்கிடமிருந்து நமக்கு 60 பில்லியன் டாலர் அளவிலான கடன் வர வேண்டியுள்ளது. அதைத்திரும்பப் பெற இதுதான் சரியான சமயம். நமது ராணுவத்தை அனுப்பி அந்த கடனை வசூலிக்கவேண்டும்.

நமது ராணுவம்தான், உலகிலேயே சிறந்த அமைதி காக்கும் படை என்ற பெயரைப் பெற்றுள்ளது.எனவே எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய பக்குவம் நமது ராணுவத்திற்கு வர வேண்டும்என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+