மாறனைப் பார்த்தார் வெங்கையா நாயுடு
சென்னை:
சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் முரசொலி மாறனை,பாரதீய ஜனதாக் கட்சித தலைவர் வெங்கையா நாயுடு இன்று பார்த்து நலம் விசாரித்தார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் முரசொலிமாறனை, வெங்கையா நாயுடு இன்று சந்தித்தார். பின்னர் வெளியே வந்த அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், விரைவில் அவர் குணமடைந்து, வழக்கம் போல மக்கள்பணியாற்ற வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் என்றார்.
பின்னர் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுகையில், உ.பியில் ஜாதி அரசியலால் மக்கள்வெறுத்துப் போயுள்ளனர். அங்கு மக்கள் விரும்பும் வகையிலான அரசை பா.ஜ.க. கொடுக்கும்.உ.பியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க பா.ஜ.க. ஆவலாக உள்ளது.
செஞ்சி ராமச்சந்திரனையும், மம்தா பானர்ஜியையும் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்ததுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தேவையில்லாத விமர்சனங்களை செய்து வருகிறது. மம்தா பானர்ஜிமுன்பு அமைச்சரவையிலிருந்து விலகினார். பின்னர் சேர விருப்பம் தெரிவித்ததால், அவரைஅமைச்சராக்கியுள்ளார் பிரதமர்.
அதேபோல, செஞ்சி ராமச்சந்திரன் தவறு செய்யவில்லை என்று நிரூபனமாகியுள்ளது. எனவேஅவரும் மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். இதில் விமர்சனங்களுக்கு இடமேயில்லை என்றார்அவர்.












Click it and Unblock the Notifications