கிடா வெட்டுவதை நிறுத்த மாட்டோம்: பூசாரிகள்
சென்னை:
கிடா வெட்டுவது பாரம்பரியமாக நடந்து வரும் சடங்கு. அதை தொடர்ந்து கடைப்பிடிப்போம்என்று கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூறியுள்ளது.
இதுதொடர்பாக பேரவையின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம், மாநில அமைப்பாளர்செளந்தரராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், கோவில்களில் விலங்குகள், பறவைகளைபலி கொடுப்பதை தடை செய்ய தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவால், பூசாரிகளுக்கிடையேயும்,இந்த சடங்கை ஆண்டாண்டு காலம் மேற்கொண்டு வரும் பொதுமக்களும் மிகுந்த மன வேதனைஅடைந்துள்ளனர்.
பாரம்பரிய மரபுகளை கேலி செய்வதும், இழிவு செய்வதும், பழிப்பதுமாக உள்ளஅரசியல்வாதிகள், இப்போது கோவில்களில் உயிர்ப் பலி கொடுப்பதை தமிழக அரசு தடைசெய்துள்ளதைக் கண்டிப்பது நீலிக் கண்ணீர் வடிப்பது போலாகும். எங்களுக்கு அரசியல்வாதிகள்யாரும் ஆதரவு கொடுக்க வேண்டாம். இவர்களது பொய் பிரசாரத்தை மக்கள் நம்பி ஏமாந்து விடவேண்டாம்.
கோவில்களில் உயிர்ப் பலி கொடுப்பது தவறு என்று கூறும் அரசு, பக்ரீத் பண்டிகையின்போதும்,இஸ்லாமிய பண்டிகைகளின்போதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்படுகிறதே, அதை ஏன்தடுக்க உத்தரவிடவில்லை? இந்துக் கோவில்களில் மட்டும் ஆடுகளை வெட்டக் கூடாது என்று கூறும்அரசு இதையும் அல்லவாத தடுக்க வேண்டும்?
அரசு எத்தனை தடைகள் போட்டாலும், மத நம்பிக்கை அடிப்படையிலும், பாரம்பரியமரபுப்ப்படியும், ஆடுகள், கோழிகள் வெட்டுவதை நாங்கள் நிறுத்திக் கொள்ள மாட்டோம்.தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications