6072 பேருக்கு 4 மாத சம்பளம் கிடைக்காது!
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4மாதங்களுக்குரிய சம்பளம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
6072 பேருடைய வழக்கு குறித்து 3 நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. தற்போதுதலைமைச் செயலக ஊழியர்களுடைய வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகுதான்மற்றவர்களின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
வருகிற 25ம் தேதி வரை தலைமைச் செயலக ஊழியர்களின் வழக்குகள் மட்டும்தான்விசாரிக்கப்படவுள்ளன. எனவே அதற்குப் பிறகு மற்ற ஊழியர்களின் வழக்குகளை விசாரிக்க 2மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே ஜூலை, ஆகஸ்ட் மாத சம்பளம் இந்தஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. வழக்கு மேலும் தாமதம் அடைவதால் செப்டம்பர் மற்றும்அக்டோபர் மாத சம்பளமும் இவர்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 6072 ஊழியர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும், சஸ்பெண்ட்செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பாதிச் சம்பளம் கிடைக்கும் என்பது ஒரு ஆறுதலான விஷயம்.












Click it and Unblock the Notifications