மாறன் எப்படி இருக்கிறார்? அப்போலோ தலைவர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முரசொலி மாறனுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து வெளியிட வேண்டாம் என்று அவரதுகுடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளதால், மாறன் உடல் நிலை மற்றும் சிகிசசை முறைகள் குறித்துஅறிக்கை வெளியிட இயலாத நிலையில் உள்ளதாக அப்போலோ மருத்துவனை தலைவர் டாக்டர்பிரதாப் சி ரெட்டி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்துஅப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எந்தவித அறிக்கையோ அல்லது பேட்டியோவெளியிடாமல் உள்ளது.

இதுகுறித்து டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறுகையில், மாறனுடைய சிகிச்சை முறைகள் குறித்துவெளியில் விவாதிக்க அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. முற்றிலும் அமைதியான முறையில்மாறனுக்கு சிகிச்சை அளிக்குமாறு எங்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாறனுடைய உடல் நிலை குறித்து தினசரி அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்து வருகிறோம்.மாறன் குறித்து எது கூறுவதாக இருந்தாலும், அதை அவரது குடும்பத்தினர்தான் பத்திரிகைகளுக்குத்தெரிவிப்பார்கள்.

மாறனுடைய தற்போதைய நிலை குறித்து நான் எதுவும் கூற முடியாத நிலையில் உள்ளேன். மாறன்சிகிச்சை முறை குறித்து அவரது குடும்பத்தினருக்கு மன வருத்தம் இருந்தது. இருந்தாலும் மாறனுக்குஇங்கு மீண்டும் சிகிச்சை அளிக்க அவர்கள் வந்துள்ளத மருத்துவ ரீதியில் எடுக்கப்பட்ட முடிவு,அதை அவர்கள் எடுத்துள்ளார்கள். நடந்த சம்பவங்கள் குறித்து இப்போது நினைத்துப் பார்க்கயாருக்கும் நேரமில்லை.

அப்போலோ மருத்துவமனையிலேயே தொடர்ந்து மாறனுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும்என்றார் ரெட்டி.

இதற்கிடையே மாறன் உடல் நிலை நிலையாகவும், தொடர்ந்து அதே நிலையில் இருப்பதாகவும்மாறன் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+