ஜாமீன்: உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார் செரீனா
Subscribe to Oneindia Tamil
மதுரை:
செரீனாவின் ஜாமீன் மனு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டு விட்டதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள மதுரை இளம் பெண் செரீனா மற்றும் அவரது தாயார்ரமீஜா ஆகியோர் மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்செய்திருந்தனர். ஆனால் அவர்களது மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இதுதொடர்பாக செரீனாவின் வக்கீல் சங்கரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீர்ப்பின்நகல் கைக்குக் கிடைத்ததும், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்படும்என்றார்.












Click it and Unblock the Notifications