விவசாயிகள் ஸ்டிரைக்: திமுக, இ.கம்யூ. ஆதரவு
சென்னை:
காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் செப்டம்பர் 11ம் தேதி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பொதுவேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுதெரிவித்துள்ளன.
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடகம் விடக் கோரியும், இதுதொடர்பாக மத்தியமற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்தப் போராட்டத்திற்கு காவிரிப்பாசனப் பகுதியைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுகுறித்து திமுக விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில், திமுகஇந்தப் போராட்டத்தை முழு மனதோடு ஆதரிக்கிறது. திமுக தொண்டர்கள் இந்தப் போராட்டத்தில்பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார்.
இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நல்லகண்ணு விடுத்துள்ள அறிக்கையில், இந்தப்போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. பிரதமரும், காவிரி ஆணையதலைவருமான வாஜ்பாய், உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசை தண்ணீர் திறந்து விடவற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications