பொடா: 8 மதிமுகவினருக்கு ஜாமீன் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வைகோ தவிர்த்த 8 மதிமுகவினரின் ஜாமீன் மனுக்களை பொடா நீதிமன்றம் இன்று தள்ளுபடிசெய்தது.

மதுரை திருமங்கலத்தில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் வைகோ தவிர்த்த மற்ற மதிமுகவினரான மதுரை கணேசன், அழகுசுந்தரம், கணேசமூர்த்தி,வீரஇளவரசன், பூமிநாதன், புலவர் செவந்தியப்பன் உள்ளிட்ட 8 பேரும் ஜாமீன் கோரி பூந்தமல்லிபொடா நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இவர்களை ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என்று அரசுத் தரப்பு வக்கீல்ஆட்சேபம் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ராஜேந்திரன், அரசுத் தரப்புஆட்சேபத்தை ஏற்றுக் கொண்டு இவர்களது ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தார்.

இதுதவிர, நீண்ட காலமாக சிறையில் இருப்பதால் மட்டும் ஜாமீன் கொடுத்து விட முடியாது என்றும்நீதிபதி தெரிவித்தார்.

வைகோ ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+