125வயது: ஒரு வருடத்திற்குக் கொண்டாடுகிறது "தி ஹிந்து"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புகழ் பெற்ற ஆங்கில நாளிதழான தி ஹிந்து, தனது 125-வது ஆண்டு விழாவை ஒரு வருடத்திற்குநாடு முழுவதிலும் கொண்டாட முடிவு செய்துள்ளது.

125-வது ஆண்டை தொட்டுள்ள தி ஹிந்து நாளிதழ், தனது 125-வது ஆண்டு விழாவைசென்னையில் வருகிற 13ம் தேதி கொண்டாடுகிறது. இதில் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொள்கிறார்.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல் துறை பிரமுகர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதுதொடர்பாக பத்திரிக்கை தலைமை ஆசிரியர் என்.ராம், இணை நிர்வாக இயக்குநர் என்.முரளிஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஹிந்து பத்திரிக்கையின் 125-வது ஆண்டு விழா ஒருவருடத்திற்கு இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்இதற்கான விழாக்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

125 ஆண்டு கால ஹிந்து பத்திரிக்கை வரலாற்றில் வெளியான பல்வேறு செய்திகளின் தொகுப்புகள்அடங்கிய புத்தகமும் சென்னை விழாவில் வெளியிடப்படும்.

பிரதமர் வாஜ்பாய் 125-வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைக்கிறார். ஆளுநர் ராம் மோகன் ராவ்தலைமை வகிக்கிறார். 12-வது நிதி கமிஷன் தலைவர் டாக்டர் சி.ரங்கராஜன் சிறப்பு விருந்தினராககலந்து கொள்கிறார்.

20 பக்க சிறப்பு விழா மலரும் வெளியிடப்படவுள்ளது. இது தவிர ஹிந்து பத்திரிக்கையின் வரலாறுகுறித்த குறும்படமும் விழாவின்போது காட்டப்படவுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

6 பேரால் கடந்த 1878ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது ஹிந்துபத்திரிக்கை. முதல் நாளன்று 80 பிரதிகள் அச்சிடப்பட்டன. ஆனால் இன்று இந்தியாவின் முதன்மைஆங்கில நாளிதழ்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது ஹிந்து. 11 இடங்களில் பதிப்புஅலுவலகங்களும், 9.33 லட்சம் பிரதிகளும் அச்சிடப்பட்டு வருகிறது. சுதந்திரப் பாராட்டகாலத்தில் ஹிந்து பத்திரிக்கையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+