ஜெருசலேம் குண்டுவெடிப்பு: இஸ்ரேல் விரைகிறார் ஷரோன்

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி:

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 14 பேர்கொல்லப்பட்டுள்ளதால், தனது இந்திய பயணத்தை ரத்து செய்து விட்டு இஸ்ரேல் திரும்புகிறார்அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஷரோன்.

நேற்று முன்தினம் இந்தியா வந்த அவர், ஜெருசலேம் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து இன்றுமாலை இஸ்ரேல் திரும்புகிறார். இதுதொடர்பாக இஸ்ரேல் தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர்கூறுகையில், இன்று மாலை ஷரோன் இஸ்ரேல் திரும்புவார். அவரது மும்பை பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக அளவிலான உறவு ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்குபயணம் செய்த முதல் இஸ்ரேல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர் ஷரோன். கடந்த 1992ம்ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.

திங்கள்கிழமை இரவு டெல்லி வந்து சேர்ந்தார் ஷரோன். நான்கு நாட்களுக்கு அவர் இந்தியாவில்சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. தனது குறுகிய பயணத்தின்போது, பிரதமர் வாஜ்பாய்,வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராஆகியோரை ஷரோன் சந்தித்துப் பேசினார். நேற்று இரவு இரு நாடுகளுக்கும் இடையே 6ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

வாஜ்பாய் கண்டனம்:

ஜெருசலேம் குண்டுவெடிப்புக்கு பிரதமர் வாஜ்பாய் கண்டனம்தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் ஷரோனுடன் தொலைபேசியில் பேசிய அவர்,பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை இரு நாடுகளும் கண்டித்து வருகின்றன. மேற்குஆசியப் பிரச்சினைக்கு வன்முறை தீர்வாகாது என்றார் அவர்.

மேலும், ஷரோனின் பயணம் பாதியில் முடிந்தது வருத்தம் தருவதாக கூறிய பிரதமர், ஜெருசலேம்நகர குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+