இளங்கோவன் மீதான வழக்கு: வாபஸ் பெற உயர்நீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரை நீதிமன்றத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மீது போடப்பட்ட அவதூறுவழக்கை வாபஸ் பெறுமாறு அரசு வக்கீலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முத்லவர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக கூறிமதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இளங்கோவன் மீது அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்தது.
இதை தள்ளுபடி செய்யக் கோரி இளங்கோவன் மதுரை நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் அந்தமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்இளங்கோவன்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி கனகராஜ், இந்த வழக்கு ஏற்புடையதல்ல. இதை வாபஸ்பெறுமாறு வழக்கைத் தொடர்ந்த அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications