மகாமகம் திருவிழா: அதிகாரிகள் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகாமக திருவிழாவைசிறப்பாக நடத்துவது குறித்து தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் தலைமையில்அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப கோணத்தில் மகாமக திருவிழா நடைபெறுவது வழக்கம்.வடக்கில் நடைபெறும் கும்ப மேளாவுக்கு இணையாக தென்னகத்தில் நடைபெறும் திருவிழாஎன்பதால் மகாமக நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கும்பகோணத்தில் உள்ளமகாமக குளத்தில் நீராடுவர். குறிப்பாக மகம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வருகை தருவதுவழக்கம்.

கடந்த முறை நடந்த மகாமக நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும்,தனியான இடத்தில் நீராடினர். அந்த சமயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர்உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு மகாமக திருவிழா வருகிறது. கடந்தமுறையைப் போல இந்த ஆண்டும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திருவிழாவை நடத்திமுடிப்பது தொடர்பாக அரசு தற்போதே தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

மகாமக திருவிழா குறித்து தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் தலைமையில் அதிகாரிகள்நேற்று சென்னையில் கூடி ஆலோசனை நடத்தினர்.பொதுத்துறைச் செயலாளர் பிச்சாண்டி, நகராட்சிநிர்வாக செயலாளர் விஜயராகவன் மற்றும் பல்துறைச் செயலர்கள் இதில் கலந்துகொண்டனர்.

மகாமக திருவிழாவுக்காக, தஞ்சையிலிருந்து கும்பகோணத்திலிருந்து போடப்பட்டு அகல ரயில்பாதைப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசைக் கேட்டுக் கொள்வது, பக்தர்களுக்கு தேவையானபாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்துஇக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+