சுய உதவிக் குழுக்களை அமைக்க ஆண்களும் ஆர்வம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மாவட்டத்தில் பெண்கள் சுய உதவிக் குழுக்களைப் போல தாங்களும் குழு அமைத்துசெயல்பட ஆர்வமாக இருப்பதாக ஏராளமான ஆண்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுகொடுத்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவால், பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மாநிலம் முழுவதிலும்தொடங்கப்பட்டது. இதன் வெற்றி மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற குழுக்களை தொடங்க வகைசெய்துள்ளது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஆண்கள் சுய உதவி குழுக்களை அமைக்க உதவி செய்யுமாறுகோரி ஏராளமானவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் இதைத் தெரிவித்த மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன்,சிலரது மனுக்கள் பரிசீலனைக்காக உரிய துறைக்கு அனுப்பப்பட்டுள்ள.

தற்போது மாவட்டத்தில் உள்ள 416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, தொடக்க கூட்டுறவுசங்கங்கள் மூலம் ரூ. 8.22 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுவதோடு, கடன்களும் உடனுக்குடன்அடைக்கப்படுவதால், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கேட்கும் எந்த வகையானகடனுதவியையும்செய்ய கூட்டுறவு சங்கங்களும், வங்கிகளும் தயாராக உள்ளன என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் காளிமுத்துவும் கலந்து கொண்டு பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+