அதிமுக பொதுச் செயலாளராக ஜெ. தேர்வு: பொன்னையன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவின் பொதுச் செயலாளராக 5-வது முறையாக போட்டியின்றித்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தேர்தல் அதிகாரியும், நிதியமைச்சருமானபொன்னையன் இன்று காலை சென்னையில் வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பொதுச் செயலாளர் தேர்தலில், ஜெயலலிதாவுக்கு ஆதரவாகபல வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அவருக்கு போட்டியாக ஒரு மனு கூடதாக்கல் செய்யப்படவில்லை.
முதல்வர் ஜெயலலிதா தற்போது ஊட்டியில் உள்ளார். அவர் மீண்டும் போட்டியின்றி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தகவல் இன்றே தெரிவிக்கப்படும்.
கிராம அளவிலான பதவிகள் முதல் அனைத்துப் பிற பதவிகளுக்கும் நிர்வாகிகளை முதல்வர்ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என்றார் பொன்னையன். பொதுச் செயலாளர் பதசவியில்ஜெயலலிதா 5 ஆண்டுகள் பதவி வகிப்பார்.
கடந்த 1988ம் ஆண்டு முதல் முறையாக ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராகதேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் ஜானகி பிரிவு அதிமுக, ஜெயலலிதா தலைமையிலானஅதிமுகவுடன் இணைந்த பிறகு 1989ம் ஆண்டு மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வுசெய்யபப்ட்டார். அதன் பிறகு 1993 மற்றும் 98 ஆகிய ஆண்டுகளில் அவர் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications