செரீனாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை:
மதுரை இளம் பெண் செரீனாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.
கஞ்சா கடத்தியதாக மதுரை இளம் பெண் செரீனா மற்றும் அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செரீனாவும், ரமீஜாவும் ஜாமீன் கோரி மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுசெய்திருந்தனர். வழக்கு விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் செரீனாவையும்,ரமீஜாவையும் ஜாமீனில் விடக் கூடாது என்று அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு மனுக்களையும் பரிசீலித்த நீதிபதி சம்பத் குமார், செரீனா, ரமீஜா மனுக்களை தள்ளபடிசெய்தார். போதைப் பொருள் தடுப்புச் சட்டப்படி, வழக்கு விசாரணை தொடக்க நிலையில்உள்ளதால், இருவரையும் ஜாமீனில் விட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செரீனாவும், ரமீஜாவும் மீண்டும் திருச்சி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுஅடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications