லஞ்சம் வாங்கவில்லை: திண்டுக்கல் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆனந்த முரசு பத்திரிக்கை அதிபர் கணபதியிடம் நான் ரூ. 65 லட்சம் லஞ்சம் வாங்கவில்லை. இந்தவிவகாரத்தில், என் பெயரையும், அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை ஆகியோரின் பெயர்கள்தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிமுக பொருளாளரும், எம்.பியுமான திண்டுக்கல் சீனிவாசன்தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்க ஆட்சேபனை இல்லை சான்றிதழை வாங்கித் தருவதற்காகதிண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு ரூ. 65 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக கூறிசெளந்தரபாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக சீனிவாசனை விசாரிக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் விஜயக்குமாருக்கு,உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட்டுள்ளஅறிக்கையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள கணபதி, பத்திரிக்கை ஆசிரியர் நியூஸ் ஆனந்தன்ஆகியோரை செய்தியாளர்களாக மட்டுமே தெரியும்.

என்னையும், அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை ஆகியோரையும் அவர்கள்பத்திரிக்கைக்காரர்களாக மட்டுமே சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் எனது பெயரையும்,அமைச்சர்கள் பெயரையும் தவறாக பயன்படுத்தியுள்ளனர் கணபதியும், ஆனந்தனும்.

இந்த விவகாரத்தில் எனது மகன் சதீஷுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. அவர் மும்பையில் வசித்துவருகிறார் என்று கூறியுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+