சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நவீன குறை கேட்பு கருவி
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்காகஅதி நவீன வசதி செய்யப்பட்டுள்ளது.
வாய்ஸ் ஸ்னாப் எனப்படும் இந்த அதி நவீன முறையை கணேஷ் பத்மநாபன் என்பவர்உருவாக்கியுள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகத்தில்தான் இது நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மின்னணு அடிப்படையில் அமைந்துள்ள இந்த முறைப்படி, ஆட்சித் தலைவரிடம் குறைகளைத்தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், வாய்ஸ் ஸ்னாப் கருவி மூலம், தங்களது குறைகளை வாய்மொழியாக தெரிவிக்கலாம்.
அவர்களது குறைகள் நேரடியாக ஆட்சித் தலைவரால் கேட்கப்படுவது வாய்ஸ் ஸ்னாப் முறையின்முக்கிய அம்சமாகும். இதன் மூலம் குறைகளுக்கு உடனடி நிவாரணம் காணப்படுவதோடு, புகார் மனுஎழுதுவது, அது உரியவர்களிடம் சென்று சேர்ந்ததா என்று காத்துக் கிடப்பது ஆகியவைதவிர்க்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் முயற்சியால் வாய்ஸ் ஸ்னாப் கருவிசிவகங்கை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே டாக்டர்ராதாகிருஷ்ணன் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது அங்குள்ள மக்களின்குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்ததோடு மட்டுமல்லாது, சேலம் மாவட்டத்தை சிறந்தமாவட்டமாக மாற்றிய பெருமைக்கும் உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications