எம்.பிக்கு ரூ. 65 லட்சம் லஞ்சம்: நீதி விசாரணைக்கு காங். கோரிக்கை
திண்டுக்கல்:
அதிமுக எம்.பி திண்டுக்கல் சீனிவாசன் ரூ. 65 லட்சம் வாங்கியதாக கூறப்படுவதாக தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிளுக்குஆட்சேபனையில்லை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக திண்டுக்கல் சீனிவாசனுக்கு ரூ. 65 லட்சம்லஞ்சம் கொடுத்ததாக ஆனந்த முரசு நாளிதழ் அதிபர் கணபதி உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு வரும்போது அவரை சந்திக்காமல் தவிர்ப்பதற்காக முதல்வர்ஜெயலலிதா ஊட்டி சென்றுள்ளார். இது கண்டனத்துக்குரியது, தவறான போக்காகும்.
மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிட்டு பிரதமருக்கும், முதல்வருக்கும் இடையே நட்புறவு இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். இதனால் மாநில மக்களின் நலன்தான் பாதிக்கப்படும் என்றார்அவர்.












Click it and Unblock the Notifications