20 ஆண்டுகளில் 25,000 இருதய ஆபரேஷன்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் எம்.ஆர்.கிரிநாத், 25,000 இதய நோய் அறுவைச்சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளார்.

சென்னை அப்பேலோ மருத்துவமனை இதயவியல் சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவராககிரிநாத் உள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளில் 25,000 ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சைகளைசெய்து சாதனை படைத்துள்ளார். இவற்றில் 99.3 சதவீத அறுவைச் சிகிச்சைகள் வெற்றிபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனைக்காக டாக்டர் கிரிநாத்தை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் டாக்டர்கிரிநாத்தைப் பாராட்டியுள்ளது. இதுதொடர்பான பாராட்டு சான்றிதழை அப்போலோமருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி வழங்கினார்.

ஒரு வயது குழந்தை முதல் 88 வயது முதியவர் வரையிலான அனைத்துத் தரப்பினருக்கும் டாக்டர்கிரிநாத் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். இது ஒரு சாதனை. அதுவும் அப்போலோமருத்தவமனையிலேயே அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் நடந்துள்ளதாக டாக்டர் ரெட்டிபாராட்டு தெரிவித்தார்.

டாக்டர் கிரிநாத்தின் குருவாக கருதப்படும் மும்பையைச் சேர்ந்த டாக்டர் நேமிஷ் ஷா பேசுகையில்,மும்பையில்தான், தென்னிந்தியாவிலேயே முதலாவது இருதய அறுவைச் சிகிச்சை நடந்தது. ஆனால்மும்பையை விட சிறந்த வசதிகள் தற்போது சென்னையில் உள்ளதாக பாராட்டினார்.

டாக்டர் கிரிநாத்தின் 25,000மாவது நோயாளி ராஜலட்சுமி. இவர் பிரபல வயலின் கலைஞர்லால்குடி ஜெயராமனின் மனைவி ஆவார். அவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+