கடத்தப்பட்ட சிறுவன் 5 மணி நேரத்தில் மீட்பு: பெண் கைது
சென்னை:
சென்னையில் கடத்திச் செல்லப்பட்ட 3 வயது சிறுவன், 5 மணி நேரத்திற்குள்கண்டுபிடிக்கப்பட்டான்.
ராயப்பேட்டையில் உள்ள எம்மா போல்ஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவருபவன் விக்னேஷ். நேற்று காலை 11.45 மணி முதல் இவனைக் காணவில்லை. இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடினர்.
இந் நிலையில் பள்ளியில் வேலை பார்த்து வரும் ஜான் என்பவரின் மகள் மல்லிகாவுடன், விக்னேஷ்சென்றதாக சிலர் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் தி.நகர் ரங்கநாதன் தெரு அருகே மல்லிகா பிடிபட்டார். அவருடன் இருந்த விக்னேஷ்மீட்கப்பட்டான்.
மல்லிகாவிடம் போலீஸார் விசாரித்தபோது, விக்னேஷ் பொம்மைகள் கேட்டதாகவும், அதைவாங்கிக் கொடுப்பதற்காகவே தி.நகர் வந்ததாகவும் கூறினார்.
ஆனால், தான் பொம்மை எதையும் கேட்கவில்லை என்றும், மல்லிகா தான் தன்னை தூக்கிவந்ததாகவும் பெற்றோரிடம் விக்னேஷ் கூறினான்.
இதைத் தொடர்ந்து மல்லிகாவை போலீஸார் தீவரமாக விசாரித்தனர்.
அப்போது, பள்ளியிலிருந்து விக்னேஷை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு வந்த அவர், உஷாஎன்பவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். விக்னேஷை தனது மகன் என்று கூறிய மல்லிகா, அவனதுசீருடையை மாற்றி விட்டு, வேறு உடையுடன் தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.
விக்னேஷை மல்லிகா ஏன் கடத்தினார் என்பது புரியாத புதிராக உள்ளது. அவர் கணவனைஇழந்தவர். அவரது ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார். மல்லிகா, அவரது உறவினர்கள்மற்றும் உஷா ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications