காவிரியில் நீர் கோரி விவசாயிகள் போராட்டம்- ரயில் மறியல், 3,000 பேர் கைது
தஞ்சாவூர்:
வறண்டு கிடக்கும் காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக விவசாயிகள் இன்று போராட்டத்தில்இறங்கினர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருச்சி, திருவாரூர், கடலூர் மாவட்ட விவசாயிகள்ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்,.சில இடங்களில் ரயில் மறியலும் போலீசாருடன் மோதலும் நடந்தது.இதையடுத்து சுமார் 3,000 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை தஞ்சை மாவட்ட பாசனத்துக்காகத் திறந்துவிடப்படும். ஆனால்,கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அணை திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடியைவிவசாயிகள் இழந்தனர்.
இந் நிலையில் இப்போது சம்பா சாகுபடிக்கும் நீர் வரும் வழியைக் காணோம். இதனால் மீண்டும் எலிக்கறி சாப்பிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் விவசாயிகளை ஆட்டிப் படைத்து வருகிறது.
இதையடுத்து கர்நாடகத்திடம் இருந்து காவிரியில் தண்ணீர் பெற தமிழக அரசும், தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கச்செய்ய மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இன்று டெல்டா மாவட்ட விவசாயிகள்போராட்டத்தில் இறங்கினர். முழு அடைப்புக்கும் அழைப்பு விடுத்தனர். இதற்கு டெல்டா மாவட்டங்களில் நல்லஆதரவு இருந்தது.
இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின்விவசாயப் பிரிவுகளும் போராட்டத்தில் இறங்கின.
தஞ்சையில் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் போக்குவரத்தும் குறைவாகவேஇருந்தது. இந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபரட்ட நூற்றுக்கணக்கானவிவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடையடடைப்பு நடந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தன. ரயில், பஸ் மறியலும் நடந்தது. சுமார்10 அரசு பஸ்களை விவசாயிகள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் வந்துபஸ்களை விடுவிக்கச் செய்ய முனைந்தபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் மோதலும்ஏற்பட்டது.
பின்னர் அப்பாவிப் பயணிகள் பாதிக்கப்பட்டதை உணர்ந்த விவசாயிகள் அந்த பஸ்களை விடுவித்தனர்.திருத்துறைப்பூண்டி சி.பி.ஐ. எம்எல்ஏ பழனிச்சாமி தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவிவசாயிகள் கைது செய்யப்பட்டனர். எம்.எல்.ஏவும் கைதானார்.
நாகப்பட்டிணம் மாவட்டத்திலும் சாலை மறியலால் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டது.மன்னார்குடியில் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார். அவருடன் பல விவசாயிகளும்கைதானார்கள்.
தமிழகம் முழுவதும் சுமார் 3,000 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications