சீர்காழி அருகே 2 திமுகவினர் வெட்டிக் கொலை: 20 பேர் கும்பல் வெறிச் செயல்

Subscribe to Oneindia Tamil

சீர்காழி:

பொதுக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய திமுகவினர் மீது பயங்கர தாக்குதல் நடந்தது. இதில் திமுகஒன்றியச் செயலாளர் உள்பட 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

சீர்காழி அருகே இந்தச் சம்பவம் நடந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கோ.சி மணி தலைமையில் திமுக பொதுக் கூட்டம் நடந்தது. கொள்ளிடம் என்ற இடத்தில்நடந்த இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாகப்பட்டிணம் மாவட்ட திமுகசெயலாளரும் எம்பியுமான விஜயன், எம்.எல்.ஏ. அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டம் முடிந்த பின் கொள்ளிடம் ஒன்றிய திமுக செயலாளர் மகாலிங்கம் தலைமையிலான திமுகவினர் செல்ல.சேதுராமன் என்ற திமுக தொண்டரின் வீட்டிற்கு சாப்பிடச் சென்றனர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோதுவேனில் வந்த ஒரு கும்பல் இவர்களை சுற்றி வளைத்தது.

சுமார் 20 பேர் கொண்ட அக் கும்பல் வீச்சரிவாள், கத்திகள், உருட்டுக் கட்டைகளுடன் இவர்களைத் தாக்கஆரம்பித்தது. இதையடுத்து அவர்கள் தப்பி ஓடினர். ஆனால், அவர்களை அக் கும்பல் விரட்டி விரட்டி தாக்கியது.

இதில் செல்ல. சேதுராமன் நடு ரோட்டிலேயே தலை வெட்டப்பட்டு இறந்தார். மகாலிங்கத்தின் இடது கை துணடாகிதனியே விழுந்தது. மேலும் 3 திமுகவினருக்கும் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதையடுத்து அக் கும்பல்வேனில் ஏறித் தப்பிவிட்டது.

இவர்களது அலறல் கேட்டு ஓடி வந்த பொது மக்கள் அவர்களை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில் மகாலிங்கத்தின் நிலைமை மோசமாக இருந்ததால் அவர் சென்னைக்கு ஆம்புலன்சில் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

தாக்கிய கும்பலின் அடையாளம் தெரியவில்லை. இச் சம்பவவம் சீர்காழியில் பெரும் பதற்றத்தைஉருவாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+