தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவரிடம் நீதிபதி விசாரணை
சென்னை:
அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் 3 நீதிபதிகள் குழுவினர்இன்று தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்ட 174 பேரிடம் விசாரணைநடத்தினர்.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் 3 நீதிபதிகள் குழுவிசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக தலைமைச் செயலக ஊழியர்களிடம் கடந்த 8 நாட்களாக விசாரணைநடந்து வருகிறது.
வரும் 25ம் தேதி வரை இவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
9வது நிாளான இன்று தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் பாண்டுரங்கனும் விசாரிக்கப்பட்டார். நீதிபதிமலை சுப்ரமணியம் முன்பு ஆஜராகி தனது நிலையை அவர் எடுத்துரைத்தார்.
நீதிபதி சுமூகமான முறையிலும், அன்பான முறையிலும் விசாரணை நடத்தியதாகவும், நல்ல முடிவு ஏற்படும் என்றநம்பிக்கை இருப்பதாகவும் பின்னர் செய்தியாளர்களிடம் பாண்டுரங்கன் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெறும் விசாரணையின்போது மற்ற ஊழியர் சங்கத் தலைவர்களான சூரியமூர்த்தி, ஸ்ரீதரன்ஆகியோரும் விசாரிக்கப்படவுள்ளனர். இதில் சூர்யமூர்த்தி அரசுக்கு ஆதரவாகத் திரும்பிவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications