மாறனை பார்ப்பதே வாஜ்பாயின் முதல் நிகழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் 13ம் தேதி சென்னைக்கு வருகை தரும் பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர் முரசொலி மாறனைப்பார்ப்பதையே தனது முதல் நிகழ்ச்சியாக வைத்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் மாறன். இந் நிலையில் வரும் சென்னையில் நடைபெறவுள்ள த ஹிந்து நாளிதழின்125-வது ஆண்டு விழாவை தொடங்கி வைக்க பிரதமர் வருகிறார்.

பிற்பகல் 12.30 மணியளவில் டெல்லியிலிருந்து சென்னை வரும் பிதரமர் வாஜ்பாய், நேராக ஆளுநர் மாளிகைக்குசெல்கிறார்.

அங்கு ஓய்வு எடுத்த பின்னர் 1 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கு மாறனைப்பார்த்து நலம் விசாரிக்கிறார்.

பின்னர் மாலை 5 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் த ஹிந்து விழாவில்கலந்து கொள்கிறார். அதன் பிறகு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+