ஓடும் பஸ்சில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்

Subscribe to Oneindia Tamil

முதுகுளத்தூர்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஓடிக் கொண்டிருந்த பஸ்சிலேயே காதலர்கள் திருமணம்செய்து கொண்டனர்.

முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை.

இவருக்கும், அனிதா கனி என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்குவழக்கம் போல ஜாதிரீதியில் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்ய முடிவு செய்த காதலர்கள் இருவரும் காவல் துறையின்உதவியை நாடினர்.

அவர்களுக்கு கல்யாணம் செய்வதற்குரிய வயது இருப்பதால் தாராளமாக மணம் செய்துகொள்ளலாம் என்று போலீசார் கூறினர். தேவையான பாதுகாப்பும் அளிப்பதாகக் கூறினர்.

இதையடுத்து தாலியை வாங்கிய அண்ணாதுரை அனிதாவை பரமக்குடிக்கு பஸ்சில் அழைத்துச்சென்றார்.

பரமகுடியில் கோவிலில் வைத்து திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார் அண்ணாதுரை. ஆனால்,அங்கு வைத்து திருமணத்தை தனது உறவினர்கள் தடுக்கலாம் என பயந்த அண்ணாதுரை பஸ் ஓடிக்கொண்டிருந்கபோதே கையில் வைத்திருந்த தாலியை எடுத்து அனிதாவின் கழுத்தில் கட்டினார்.

முதலில் கொஞ்சம் திகைத்த சக பயணிகள், பின்னர் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+