தலைமை செயலக அறைகளை காலி செய்ய சங்கங்களுக்கு அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள அரசு ஊழியர் சங்கங்களின் அலுவலகங்களைக் காலி செய்யஉத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் தான் இந்தச் சங்கங்களின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டது.
இதையடுத்து தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள அறைகளில் இயங்கி வரும் தமிழ்நாடு தலைமைச் செயலகச்சங்கம், டிரைவர்கள் சங்கம், கிளார்குகள் சங்கம், அதிகாரிகள் சங்கம், டைப்ரட்டர்கள் சங்கம் ஆகிய சங்கங்களைஉடனடியாகக் காலி செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளைக்குள் காலி செய்யாவிட்டால் பொருள்களை அள்ளி வெளியே வீசிவிட்டு அறைகளை அரசு சீல் வைக்கும்என்று தெரிகிறது. இந்த உத்தரவை அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
அதிகாரிகள் மூலம் வாய்மொழி உத்தரவாகவே கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications