பொடாவில் கைதான மதிமுக நிர்வாகி மணியம் மண்டை உடைந்தது: குளியலறையில் வழுக்கி விழுந்தார்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதிமுக நிர்வாகிகளில் ஒருவரான பி.எஸ்.மணியம், தான்அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின், குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் அவரது மண்டை உடைந்தது.
வைகோவுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட மணியம், நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்காக வேலூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் படையின் தீவிரகண்காணிப்பில் அவர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு வாரங்களாக மருத்துவமனையில் உள்ள அவர் இன்று காலை குளியலறையில் தவறி விழுந்தார். இதில்குளியல் தொட்டியில் அவரது தலை மோதி மண்டை உடைந்தது. இதையடுத்து அங்கேயே அவர் மயங்கினார்.
உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மண்டையில் தையல்கள் போடப்பட்டன. தொடர்ந்து அவசரசிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் மணியம்.












Click it and Unblock the Notifications