ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் போலீஸ் சோதனை: ஜன்னல் வழியே லஞ்ச பணத்தை எறிந்த ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லஞ்ச- ஊழலில் திளைத்து வரும் ஆர்.டி.ஓ. (வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்) அலுவலகங்களில் லஞ்சஒழிப்புப் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ.அலுவலகங்களிலும் இந்தச் சோதனை நடந்தது.

ரெய்ட் நடந்தபோது தஞ்சாவூர் ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்கள் தங்களிடம் இருந்த ரூ. 3 லட்சத்தை ஜன்னல்வழியே ரோட்டில் வீசினர்.

ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள், பிரேக் இன்ஸ்பெக்டர்கள், ஊழியர்கள் ஆகியோர் புரோக்கர்களுடன்இணைந்து தனி ராஜாங்கமே நடத்தி வருகின்றனர். சென்னை ஆர்.டி.ஓ. அலுவலக பிரேக் இன்ஸ்பெக்டர்களைப்பொறுத்தவரை ஒரு நாளைக்கு ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ. 12,000 லஞ்சம் கிடைப்பதாக கணக்குஉள்ளது.

தமிழகத்தின் பிற நகர்களின் இந்த லஞ்சத்தின் அளவு ரூ. 6,000 முதல் ரூ. 10,000 ஆக உள்ளது.

டிரைவிங் லைசென்ஸ், எல்.எல்.ஆர்., வெகிக்கிள் பிடினஸ் சான்றிதழ் என ஆர்.டி.ஓ. அலுவலகத்தைப்பொறுத்தவரை எதெற்கெடுத்தாலும் லஞ்சம் தான். புரோக்கர்கள் துணை இல்லாமல் எந்த வேலையும் நடக்காதநிலை உள்ளது.

இதையடுத்து சமீபத்தில் அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்கள்அலுவலகத்துக்கு வரும்போது கையில் எவ்வளவு பணம் கொண்டு வந்தார்கள் என்பதை ஒரு ரிஜிஸ்டரில் பதிவுசெய்ய வேண்டும். திரும்பிப் போகும் போது எவ்வளவு எடுத்துச் சென்றார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

நடுவில் சோதனை நடத்தப்பட்டால், கையில் கூடுதல் பணம் இருந்தால் லஞ்ச வழக்குப் பதிவு செய்யப்படும் என்றுகூறப்பட்டிருந்தது. ஆனால், இதை அந்த அலுவலக ஊழியர்கள் மதித்ததாகத் தெரியவில்லை.

இந் நிலையில் சென்னையில் உள்ள 5 ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் தஞ்சை, திருவண்ணாமலை, தர்மபுரி எனபல்வேறு ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது மீனம்பாக்கம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ. 21,000 லஞ்சப் பணம் பிடிபட்டது. இந்தப் பணத்தைஊழியர்களுக்குத் தந்த புரோக்கர்கள், டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் சிலரும் பிடிபட்டனர்.

திருவான்மியூரில் ரூ. 9,000 லஞ்சப் பணமும் 3 புரோக்கர்களும், 2 ஊழியர்களும் பிடிபட்டனர்.

கே.கே. நகரில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ. 14,000 லஞ்சப் பணத்துடன் 4 புரோக்கர்களும், 4 டிரைவிங்ஸ்கூல் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 ஊழியர்கள் ரூ. 37,000 லஞ்சத்துடன் பிடிபட்டனர்.

தஞ்சையில் சோதனைக்காக போலீசார் நுழைந்தவுடன் அங்கிருந்த ஊழியர்கள் பணத்தை ஜன்னல்கள் வழியேவெளியே எறிந்தனர். இதை போலீசார் பொறுக்கிச் சென்று எண்ணியபோது ரூ. 3 லட்சம் தேறியது. மதுரைஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முனிபு இதே போலத் தான் பணத்தை ஊழியர்கள் வெளியே எறிந்தனர். பலர் அதைக்கிழித்து குப்பைத் தொட்டிகளில் கூட வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+