செருப்பு வாங்க வந்தவர் தற்கொலை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன மாடியிலிருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பங்குதாரர் உள்ளிட்ட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவர் சரவணா ஸ்டோர்ஸ்நிறுவனத்தில் செருப்பு வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது, செருப்பு கால்களுக்குசரியாகப் பொறுந்தவில்லை.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை சரவணா ஸ்டோர்சுக்குச் சென்றார். செருப்பு சரியில்லை என்றுகூறிய அவர் அதை மாற்றித் தருமாறும் கோரியுள்ளார். ஆனால் மாற்றித் தர டியாது என்றுசரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் கூறியுள்ளது.

இது தொடர்பாக அவருக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடையில் பணியாற்றும் ஜூலி என்ற பெண்மணியும், சில ஊழியர்களும் கணேசனைதனி அறைக்குக் கூட்டிச் சென்று கடுமையாகத் தாக்கினர். மேலும் மோசமான வார்த்தைகளால்திட்டியுள்ளனர்.

இதையடுத்து மனம் வெறுத்துப் போன கணேசன் கடையின் 4-வது மாடியின் ஜன்னல் வழியாக கீழேகுதித்தார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சைபலனின்றி இறந்துவிட்டார்.

தனது வாக்குமூலத்தில் சரவணா ஸ்டோர்சில் தனக்கு நேர்ந்த அவமானத்தை அவர் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை செய்து சரவணா ஸ்டோர்ஸ்நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான பொன்னுத்துரை, ஊழியர்கள் ஜூலி, கண்ணன், சாரதிஆகியோரை கைது செய்துள்ளனர்.

முன்பொருமுறை பொருள் வாங்கச் சென்ற குடும்பப் பெண்மணி ஒருவரை திருடி பட்டம் சாற்றிகேவலப்படுத்தியது சரவணா ஸ்டோர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களை கேவலமாக நடத்துவதும், ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும்இந்தக் கடையில் வாடிக்கையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+