கருத்தரங்கிற்கு சங்கராச்சாரியாரை அழைப்பதா?: அண்ணா பல்கலைக்கு வீரமணி கண்டனம்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு காஞ்சி சங்கராச்சாரியாரை அழைத்ததற்கு பல்கலைநிர்வாகத்துக்கு திராவிடர்கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஹியூமன் வேல்யூஸ் என்ற தலைப்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளகருத்தரங்கிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு அண்ணா பல்கலைக்கழகம் அழைப்புவிடுத்துள்ளது.
தீண்டாமை ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என்று பேசியவர் ஜெயேந்திரர். இப்படிப்பட்டஒருவருக்கு மனித குல மதிப்பீடுகள் குறித்து பேச எந்தத் தகுதியும் கிடையாது.
பெரியார் பிறந்த நாளான 17ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அண்ணாவின் பெயரால்அமைந்த பல்கலைக்கழகம், பெரியாரின் பிறந்த நாளன்று இதுபோன்ற நிகழ்ச்சிக்கு, காஞ்சிசங்கராச்சாரியாரை அழைத்துள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications