சென்னையில் வாஜ்பாய்- கருணாநிதி நாளை சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் வாஜ்பாய் நாளை சென்னை வரும்போது அவரை சந்தித்துப் பேசப் போவதாக திமுகதலைவர் கருணாநதி கூறினார்.

தமிழக பா.ஜ.கவுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தனது உறவைத் துண்டித்துக் கொண்டதுதிமுக. அதன் பிறகு பிரதமரை கருணாநிதி சந்திப்பது இதுவே முதல்முறையாகும். வைகோ கைதுக்குப்பின் நடக்கும் இருவரின் முதல் சந்திப்பும் இதுவே. மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில்காங்கிரஸ்-திமுக கூட்டணி அமையலாம் என்ற யூகங்கள் உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடக்கிறது.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

நாளை சென்னை வரும் பிரதமர் வாஜ்பாய் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று மத்தியஅமைச்சர் முரசொலி மாறனை சந்திக்கிறார். அப்போது நானும் அங்கு செல்வேன்.

பிரதமரை சந்தித்துப் பேசவுள்ளேன். நட்புரீதியான சந்திப்பாக இது இருக்கும். அங்கு அரசியல்பேச்சுவார்த்தைகள் இருக்குமா என்பதை கூறுவதற்கில்லை. வாஜ்பாயுடன் உள்ள எனது தனிப்பட்டநட்பை அரசியலுக்குப் பயன்படுத்த நான் விரும்பவில்லை.

முதலில் அவரை ராஜ்பவனில் சந்திக்கவே திட்டமிட்டிருந்தேன். ஆனால், மாறனைப் பார்க்க அவர்வருவதால் மருத்துவமனையிலேயே அவரை சந்திக்கவுள்ளேன்.

பொடா சட்டத்தை வாபஸ் வாங்குவது குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் திட்டம் ஏதும்என்னிடம் இல்லை. செஞ்சி ராமச்சந்திரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்தது குறித்து கருத்துகூற விரும்பவில்லை.

வாஜ்பாய் சென்னை வரும்போது முதல்வர் ஜெயலலிதா வெளியூர் போய்விட்டதில் ஆச்சரியம்ஏதும் இல்லை என்றார் அவர்.

வாஜ்பாய்க்கு 3,000 போலீஸ் பாதுகாப்பு:

இதற்கிடையே பிரதமர் வாஜ்பாய் சென்னை வருவதையொட்டி சென்னை நகரில் 3,000 போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை வரும் பிரதமர் வாஜ்பாய், நேராகஅப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்முரசொலி மாறனைப் பார்த்து நலம் விசாரிக்கிறார். கருணாநிதியுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுக்கிறார். மாலை 5 மணியளவில் சென்னைபல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கையின்125-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். இரவே டெல்லி திரும்புகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னை நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. விமான நிலையம், அப்பல்லோ மருத்துவமனை, விழா நடக்கும்பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் ஆகிய இடங்களில் அதிரடிப்படை போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர். சாதாரண உடையிலும் போலீஸார் நிறுத்தப்பட உள்ளனர்.

அதி நவீன கண்காணிப்புக் கேமராக்கள், செல் போன்களை செயலிழக்க வைக்கும் ஜாமர் கருவிகள்ஆகியவையும் டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. பிரதமரின் பயன்பாட்டுக்காக நான்குகுண்டு துளைக்காத கார்களும் ராணுவ விமானம் மூலம் டெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

மொத்தம் 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சென்னை நகரஇணை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார்.

இது தவிர பிரதமரின் பாதுகாப்புக்காக 25 சிறப்பு கமாண்டோ படை வீரர்களும் சென்னை வந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+