குஜராத் அரசு மீது நம்பிக்கையில்லை: உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மதக் கலவரத்தை முன்னின்று நடத்தியவர்களை நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் பா.ஜ.க. அரசுதண்டிக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு அறவே இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத் மதக் கலவரத்தின்போது பெஸ்ட் பேக்கரி என்ற கடையில் 14 சிறுபான்மையினர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரையும் கீழ் கோர்ட் விடுதலை செய்துவிட்டது.

இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குஆதரவாக குஜராத் அரசு பேசி வருகிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முறையாக வழக்குப் பதிவுசெய்யவும், அவர்களைத் தண்டிக்கவும் மறுத்து வருகிறது.

இதையடுத்து குஜராத் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றதில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி காரே, நீதிபதி பிரஜேஷ் குமார், நீதிபதி சின்ஹா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதனைவிசாரித்தது. அப்போது குஜராத் அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

குற்றவாளிகளை குஜராத் அரசு தண்டிக்கும் என்ற நம்பிக்கையே தங்களுக்கு இல்லை என நீதிபதிகள்தெரிவித்தனர்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவைச்சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இந்த மனுவே ஒரு கண்துடைப்பு தான் என்று கூறினர்.

கலவரத்தை நடத்திய குற்றவாளிளைத் தண்டிக்க முடியாத அரசு ஏன் பதவியில் இருக்க வேண்டும்?. நாங்கள்356யை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் ஒரு அரசுக்கு எது தர்மம்?.குற்றவாளிகளை தண்டிக்காமல் விடுவது தான் ஜனநாயகம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? என்றுகேட்டனர்.

அப்போது பேசிய குஜராத் அரசின் வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவைத்திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதாகக் கூறினார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வரும் 19ம் தேதி குஜராத் போலீஸ் டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர்இருவரும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் மதக் கலவரத்தின்போது நடந்த முக்கியமான சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து குற்றவாளிகளைத்தண்டிக்க தனியாக ஒரு குழுவை குஜராத் அரசு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

குஜராத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு என்ற பெயரில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தாக்கலாகியுள்ள மனுவைசுட்டிக் காட்டிய நீதிபதிகள், இது ஒரு அப்பீல் மனுவா?, 1 வருடம் வழக்கறிஞராக இருந்தவர் கூட இப்படிப்பட்டமனுவைத் தயார் செய்திருக்க மாட்டார். கண்துடைப்புக்காகவும் ஏமாற்றுவதற்காகவும் இந்த மனுவைத் தயார்செய்துள்ளது குஜராத் அரசு.

இதை நாங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். உயர் நீதிமன்றத்திடம் குஜராத் அரசு முறையாகபதில் அளிக்காவிட்டால், முறையான ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் நாங்கள் தலையிட வேண்டி வரும் என்றுநீதிபதிகள் எச்சரித்தனர்.

இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு உள்ளான போதிலும் நரேந்திர மோடியை ராஜினாமா செய்யச்சொல்லும் திட்டம் ஏதும் தங்களிடம் இல்லை என பா.ஜ.க. அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+