மைசூரில் ஜெ- சசி: சாமூண்டிஸ்வரி கோவிலில் பூஜை நடத்தினர்
மைசூர்:
முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் இன்று மைசூரில் உள்ள சாமுண்டி மலைக்குச் சென்றுஅங்குள்ள கோவிலில் வழிபாடு நடத்தினர்.
ஊட்டியில் தங்கியுள்ள ஜெயலலிதாவும் சசிகலாவும் இன்று காலை மைசூர் வந்தனர். பின்னர் சாமுண்டி மலையில்உள்ள சாமுண்டீஸ்வரி ஆலயத்துக்குச் சென்று வழிபட்டனர்.
சுமார் அரை மணி நேரம் கோவில் கருவறையில் பூஜைகள் செய்துவிட்டு வெள்யே வந்த அவர்களை நிருபர்கள்சூழ்ந்து கொண்டு காவிரி விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினர். ஆனால்,நான் தனிப்பட்ட முறையில் கோவிலுக்கு வந்துள்ளேன். இதனால் பேட்டி தர முடியாது என ஜெயலலிதாகூறிவிட்டார்.
முன்னதாக கோவிலுக்கு வந்த ஜெயலலிதாவை கோவில் நிர்வாகிகள் முழு மரியாதைகளுடன் அழைத்துச்சென்றனர்.
ஜெயலலிதாவின் வருகை மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சாமுண்டி மலைப் பகுதிமுழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் வருகை தருவது யார் என்று தெரியாமல்நெடுநேரம் குழப்பம் நீடித்தது.
12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சாமுண்டீஸ்வரி ஆலயம் மைசூர் உடையார் மன்னர்களின் குல தெய்வமாகும்.ஜெயலலிதாவின் சொந்த ஊர் மைசூர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications