வெள்ளையர் ஆட்சியிலும் இல்லாத கொடுமை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாரதியார் நினைவு நாளையொட்டி கடற்கரையில் கூட்டம் நடத்தச் சென்ற நில்லகண்ணு, வரதராஜன் ஆகியோரைபோலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், இதே கடற்கரையில் கடந்த 6ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடக்கப்பட்டது.அதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அதேபோல, கடந்த 8ம் தேதி விநாயகர் சிலைகள்கரைக்கப்பட்டன. அதையும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி பார்த்தனர்.

இதையெல்லாம் தடுக்காத தமிழக போலீஸார், நல்லகண்ணு, வரதராஜன் போன்றோரை தடுத்ததும், கைது செய்துவழக்குப் போட்டதும் கண்டிக்கத்தக்கது.

வெள்ளையர்களை எதிர்த்து இதே கடற்கரையில் பல கூட்டங்கள், போராட்டங்களை நடத்தியுள்ள, பாரதியாரின்நினைவு நாளை கொண்டாட விடாமல் தடுத்தது, வெள்ளையர் ஆட்சியிலும் இல்லாத கொடுமை. கடற்கரையில்காட்டு தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறாது இந்த அரசு என்று கூறியுள்ளார்.

பாரதியாருக்கு அவமானம்: இளங்கோவன்

பாரதியார் நினைவு தினத்தை அனுஷ்டிக்க விடாமல் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை கைது செய்ததன் மூலம், தமிழக அரசுபாரதியாருக்கு அவமரியாதையை ஏற்படுத்தி விட்டது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், மெரீனா கடற்கரையில், பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு கூட்டம் நடத்தச் சென்ற,கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோரைத் தடுத்து நிறுத்திக் கைது செய்துள்ளது தமிழக அரசு.

இதன் மூலம் கம்யூனிஸ்ட் தலைவர்களை அரசு கைது செய்யவில்லை, மாறாக, பாரதியாரை அவமரியாதை செய்துள்ளது.

எதிர்க் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள், பேரணிகளை தடுத்து நிறுத்ததுல், அவர்கள் மீது பொய் வழக்குப் போடுதல் எனசர்வாதிகாரப் போக்குடன் நடந்து வருகிறது தமிழக அரசு.

இதன் மூலம், எதிர்க்கட்சிகள் தங்களது ஜனநாயகக் கடமைகளை ஆற்ற விடாமல் தடுக்கப் பார்க்கிறார் ஜெயலலிதா. இதைஒடுக்கவும், தமிழக மக்களை காப்பாற்றவும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்என்று கூறியுள்ளார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+