மழை வேண்டி கழுதைகளுக்கு டும்..டும்..
தேனி:
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மழை பெய்ய வேண்டி 2 கழுதைகளுக்கு திருமணம் செய்துவைத்து, ஊர் மக்களுக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது.
கம்பம் கோகிலாபுரம் பகுதி மக்கள், மழை பெய்ய வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஊர் மக்களிடம் நிதி வசூலித்து, ஒரு ஆண் கழுதைக்கும்,பெண் கழுதைக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இன்று காலை இந்தக் கழுதைத் திருமணம் நடந்தது. வேத முறைப்படி மந்திரங்கள் முழங்ககழுதைகளுக்கு மாலை சூட்டி, தாலியும் கட்டப்பட்டது.
பின்னர் டிராக்டர் ஒன்றில் மணமக்களை நற்க வைத்து ஊர்வலமும் நடந்தது. இதைத் தொடர்ந்து ஊர்மக்களுக்கு கல்யாண விருந்தும் போடப்பட்டது.
கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை ஆதிகாலத்தில்இருந்தே இருப்பதால் இந்தத் திருமணத்தை செய்து வைத்ததாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications