திருப்பதி கோவிலில் ஆன்-லைன் மூலம் ரூ. 5.8 கோடி வசூல்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கடந்த 17 மாதங்களில் ஆன்-லைன் மூலம் மட்டும் ரூ. 5.83 கோடிவசூலாகியுள்ளது.
இதில் ரூ. 3.24 கோடி இ-சேவா எனப்படும் ஆன்-லைன் பூஜைக்காக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ. 1.62 கோடிஇ-உண்டியல் மூலம் காணிக்கையாக வந்து சேர்ந்துள்ளது.
இது தவிர ரூ. 80.7 லட்சம் இ-அகாமொடேசன் என்ற ஆன்-லைன் தங்கும் வசதி ரிசர்வேசன் சேவைக்காகசெலுத்தப்பட்ட கட்டணமாக கிடைத்துள்ளது.
இந்த மூன்று சேவைகளும் கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதில் இ-சேவா மூலம் திருப்பதி கோவிலில் நடக்கும் பல்வேறு பூஜைகளுக்கு ஆன்-லைனில் டிக்கெட் பெற்று,அந்தப் பூஜைகளில் தங்கள் ஊரில் இருந்தபடியே பங்கேற்க முடியும். கிரெடிட் கார்ட் மூலம் இதற்கான பணத்தைச்செலுத்தலாம்.












Click it and Unblock the Notifications